நடிகர் அக்ஷய் குமாரின் கோல்ட் டீசர்

gold movie official teaser release

நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் தற்போது 'பட்மன்' படம் உலகம் முழுவதும் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஆர் பல்கி இயக்க அக்ஷய் குமார் ஜோடியாக நடிகை சோனம் கபூர் நடித்துள்ளார். இந்த படம் கோயம்புத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் இயக்குனர் சங்கரின் '2.0', இயக்குனர் ரீமா கக்தி இயக்கத்தில் 'கோல்ட்' போன்ற படங்கள் வெளியாகவுள்ளது.



இதில் இயக்குனர் ரீமா கக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோல்ட்' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் வெளியான 14 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்தியா சுதந்தியம் அடைந்த பிறகு லண்டனில் 1948-ஆம் ஆண்டு நடந்த ஹாக்கி ஒலிம்பிக்போட்டியில் தனது முதல் தங்க பதக்கத்தை வென்றது. சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக இந்தியா 1928, 1932, 1936-ஆம் ஆண்டுகளில் இந்தியா மூன்று தங்க பதக்கத்தை வாங்கியுள்ளது.



ஆனால் சுதந்திரம் அடைந்த பிறகு ஹாக்கியில் இந்திய வாங்கிய முதல் தங்க பதக்கம் 1948-ஆம் ஆண்டில் நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் தான். இதனை அடிப்படையாக வைத்து தற்போது உருவாகியுள்ள படம் 'கோல்ட்'. இந்த படத்தை எக்ஸல் என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் கேப் ஆப் கூட் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.