நட்புனா என்னானு தெரியுமா டீசரை வெளியிட்ட விஷால்

vishal release Natpuna Ennanu Theriyuma movie teaser

புதுமுக இயக்குனர் சிவகுமார் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'நட்புனா என்னானு தெரியுமா'. இந்த படத்தில் தொலைக்காட்சி நடிகரான கவின் நாயகனாக நடித்துள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சரவணன் மீனாட்சி' சீரியலில் பிரபலமானவர். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். நடிகை ரம்யா நம்பீசன் நடிப்பில் முன்னதாக 'சதியா' படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  இதனை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபு தேவா நடித்து வரும் 'மெர்குரி' படத்திலும், புதுமுக இயக்குனரான சிவகுமார் இயக்கத்தில் நட்புனா என்னானு தெரியுமா படத்திலும் நடித்து வருகிறார்.



இந்த படத்தை லிப்ரா ப்ரொடக்சன் மற்றும் வனிதா பிக்ச்சர்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகர் மற்றும் பாடகரான அருண்ராஜா காமராஜ் மற்றும் ராஜு ஜெயமோகன் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் இணைந்துள்ளனர். முன்னதாக இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டீசரை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷால் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.


நட்புனா என்னானு தெரியுமா டீசரை வெளியிட்ட விஷால்