ஆர்யாவின் கஜினிகாந்த் டீசர் வெளியீடு

ghajinikanth movie official teaser

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவந்த 'ஹர ஹர மஹாதேவகி' காமெடி படத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருந்தது. இந்த படத்தினை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருந்தார் . இந்த படத்தினை தொடர்ந்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற மற்றொரு படத்தினை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் ஆர்யா நடிப்பில் 'கஜினிகாந்த்' என்ற படத்தினை இயக்கிவருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை ஆர்யா பிறந்த நாளை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். 'ஸ்டுடியோ கிரீன்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்து வரும் இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக 'வனமகன்' புகழ் சாயிஷா சைகல் இணைந்துள்ளார். இவர் தற்பொழுது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியிடம் இணைந்து 'ஜூங்கா' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது 'கஜினிகாந்த்' படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு விஷால், கார்த்தி, ராணா டகுபதி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை டிவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.  


ஆர்யாவின் கஜினிகாந்த் டீசர் வெளியீடு


  Tags : 
 • actor arya new movie ghajinikanth first look poster
 • ghajinikanth movie official teaser
 • actor arya new movie ghajinikanth
 • hara hara mahadevaki movie director
 • Santhosh P Jayakumar new movie
 • Santhosh P Jayakumar iruttu araiyil murattu kuthu movie
 • ghajinikanth movie second look poster
 • ஹர ஹர மஹாதேவகி
 • இருட்டு அறையில் முரட்டு குத்து
 • இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார்
 • ஆர்யாவின் கஜினிகாந்த் டீசர் வெளியீடு
 • கஜினிகாந்த்
 • கஜினிகாந்த் செகண்ட் லுக் போஸ்டர்
 • கஜினிகாந்த் படத்தின் டீசர்
 • கஜினிகாந்த் போஸ்டரை வெளியிட்ட சூர்யா
 • கஜினிகாந்த் போஸ்டரை வெளியிட்ட திரிஷா ஹன்சிகா