இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர் வெளியீடு

iruttu araiyil murattu kuthu movie official teaser

இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. இந்த படத்தில் நாயகனாக கவுதம் கார்த்திக் நடிக்க அவருக்கு ஜோடியாக  வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த 2017-இல் 'சக்க போடு போடு ராஜா' படம் வெளியானது. இதில் நடிகர் சந்தானத்துடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.



இதனை தொடர்ந்து இவருடைய நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'சர்வர் சுந்தரம்'. இதில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது இந்த படத்தின் டீசரை இன்று மாலை 5மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கருணாகரன், மொட்ட ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய் உள்ளிட்ட பல காமெடி நடிகர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது புளு கோஸ்ட் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார்.



இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் தற்போது 'கஜினிகாந்த்', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஆர்யாவின் 'கஜினிகாந்த்' படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடிகர் ஆர்யா, கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் ஒரு பாடலுக்கு கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார். காமெடி கலந்த பேய் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் போஸ்டர், இசை போன்றவை முன்னதாக  வெளிவந்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட உள்ளது.

iruttu araiyil murattu kuthu movie official teaser

இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர் வெளியீடு