இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர் வெளியீடு

By : Rathiga       Published On : Feb 08, 2018 11:07 IST    
iruttu araiyil murattu kuthu teaser release from tomorrow iruttu araiyil murattu kuthu teaser release from tomorrow

கடந்த ஆண்டு சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், நிக்கிகல்ரானி நடிப்பில் வெளிவந்த அடல்ட் காமெடி படமான 'ஹர ஹர மகாதேவகி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த வெற்றி படத்தினை தொடந்து மீண்டும் ஒரு அடல்ட் காமெடி படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தினை இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கிவருகிறார். இந்த படத்திலும் நாயகனாக கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். இரண்டாவது முறையாக இணைந்துள்ள இக்கூட்டணியில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா இணைந்துள்ளார். இவர் சக்க போடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நாயகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருடன் யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி என இரு நாயகிகள் நடித்து வருகின்றனர்.  விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருணத்தில் இருப்பதாக தகவல் முன்னதாகவே வெளிவந்திருந்தது. இந்நிலையில் கடந்த நாட்களில் வெளிவந்த படத்தின் போஸ்டர், இரண்டு சிங்கிள் பாடல் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இதனை தொடந்து படக்குழு படத்தின் டீசரை நாளை வெளியிடுவதாக அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, ‘மீசையை முறுக்கு’ புகழ் ஷாரா போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருவதோடு ஒரு பாடலுக்கு நடனமாடும் காட்சியில் நடிகர் ஆர்யா இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கௌதம் மேனன் தற்பொழுது 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.மேலும் இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரை படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர் வெளியீடு


  Tags :