ஜூங்கா படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ்

junga official title teaser

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்பொழுது சூப்பர் டீலக்ஸ், 96, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றே, இமைக்க நொடிகள், சீதக்காதி, இடம் பொருள் ஏவல், சை ரா, ஜூங்கா போன்ற பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பதோடு சில படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்களின் படப்பிடிப்புகளும் முடிவடைந்துள்ளது. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' மெகா ஹிட் காமெடி படத்தினை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெற்ற இயக்குனர் கோகுல் தற்பொழுது எழுத்து மற்றும் இயக்கத்தில் ஜூங்கா படத்தினை இயக்கிவருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கெட்டப்பில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். அருண் பாண்டியன், கணேஷ், ராஜேஷ் குமார்  உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி மாறுபட்ட வேடத்தை கையாண்டுள்ளார். மேலும் இவருடன் இணைந்து சாயிஷா, யோகி பாபு, நேஹா சர்மா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர்.  இந்த படத்தில் சித்தார்த் விபின் இசையமைக்க சாபு ஜோசப் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். தற்பொழுது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் விஜய் சேதுபதியை பார்க்கும் போது காமெடி கலந்த வில்லன் கெட்டப்பை கையாண்டிருப்பது போன்று தெரிகிறது. இதனை தொடர்ந்து மலேசியாவில் இன்று கோலாகலமாக நடைபெற்று வரும் 2018 ம் ஆண்டிற்கான நட்சத்திர விழாவில் இப்படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளனர்.  

 


ஜூங்கா படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ்


  Tags : 
 • vijay sethupathi junga title teaser release
 • junga title teaser release
 • junga title teaser released
 • junga movie updates
 • junga title teaser
 • natchathira vizha 2018
 • junga first look
 • junga first look poster
 • junga first look poster release
 • junga first look release
 • junga official
 • ஜூங்கா படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ்
 • நட்சத்திர விழாவில் வெளியிட்ட ஜூங்கா டைட்டில் டீசர்
 • ஜூங்கா டைட்டில் டீசர்
 • ஜூங்கா படத்தின் புதிய தகவல்
 • ஜூங்கா படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
 • ஜூங்கா படத்தின் பஸ்ட் லுக்
 • ஜூங்கா படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்
 • junga official title teaser