டிடிவி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஷால்

vishal wishes to ttv dinakaran

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 140கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். இதில் நடிகர் விஷால், ஜெ.தீபா உள்பட 50 கும் மேலானோர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இதனால் நடிகர் விஷால் இடைத்தேர்தலில் போட்டியிடப்படாமல் போனது. இதனை அடுத்து ஆளும் கட்சியான அதிமுக, திமுக, பாஜகவை எதிர்த்து சுயேட்சையாக டிடிவி தினகரன் போட்டியிட்டார். தேர்தல் கடந்த டிசம்பர் 21-இல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் ஏராளமான பணப்பட்டுவாடா செய்தததாக பல்வேறு காட்சிகள் மீது புகார்கள் எழுந்தது.  இதனை அடுத்து தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிட்டது. காலை எட்டு மணிக்கு எண்ணப்பட்ட வாக்கு முடிவுகள் 19 சுற்றுகள் நிறைவடைந்து மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சிகளை தோற்கடித்து அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்று பல்வேறு தரப்பினரிடம் சர்ச்சை கிளம்பியுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட பாஜக நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்தது. இதுவரை நடந்த இடைத்தேர்தலில் ஆளும் காட்சிகள் 45 முறையும் எதிர்க்கட்சிகள் 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சுயேட்சையாக ஆளும் காட்சிகளை எதிர்த்து நின்று டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் விஷால் வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

vishal wishes to ttv dinakaran

டிடிவி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஷால்