பிரதமர் அவர்களே!.. இந்த வெற்றி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?.. - நடிகர் பிரகாஷ்ராஜ்

prakash raj tweet about prime minister modi

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. இதில் பாரதிய ஜனதா கட்சி காங்கிரசை விட அதிகப்படியான இடங்களை பிடித்தி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் காங்கிரசை கட்சியை 6வது முறையாக பாஜக தோற்கடித்துள்ளது. இந்த வெற்றியை கட்சியை சேர்ந்த தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மோடியிடம் ஒரு கேள்வியை டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் "பிரதமர் மோடி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றியை முதலில் தூக்கியெறியுங்கள், நீங்கள் ஆட்சி செய்யும் இந்த நேரத்தில் மற்ற இடங்களில் இருந்து ஏன் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. சில நேரத்தை நினைவு கூறுவதற்கு ஒதுக்குகிறீர்களா?...



1.பிரிவினைவாத அரசியல் வேலை செய்யவில்லை 



2.இந்தியாவில் மற்ற இடங்களில் நடக்கும் சம்பவங்களை காட்டிலும் மிக பெரிய பிரச்சனை இருக்கிறது.          



3.கிராமப்புற ஏழை மக்களின் அழுகுரல் அதிகமாகியுள்ளது, 

  அது உங்களுக்கு கேட்கவில்லையா?...
" என்று தெரிவித்துள்ளார்.


பிரதமர் அவர்களே!.. இந்த வெற்றி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?.. - நடிகர் பிரகாஷ்ராஜ்