மோடி காளான் சாப்பிட்டு கலரானார் - காங்கிரஸ் தலைவர்

modi eats mushrooms

நேற்றுடன் குஜராத் சட்டசபை தேர்தல் நிறைவடைந்தது. குஜராத் காங்கிரஸ் தலைவர் அல்பேஸ் தாகூர் நேற்று பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.  அதில் "பிரதமர் மோடி சாப்பிடுவதை போல் உங்களால் சாப்பிட முடியாது என்று ஒருவர் கூறினார். ஏன் என்று கேட்டேன், அதற்கு காளான்கள் என்றார். காளான்கள் எளிதில் கிடைக்குமே என்று நான் கேட்டபோது காளான்கள் எளிதில் கிடைக்கும் ஆனால் அவர் சாப்பிடும் காளான் தைவானில் இருந்து வரவழைக்கப்படுகிறது. ஒரு காளானின் விலை 80,000 ரூபாய், அவர் தினமும் 5 காளான்களை சாப்பிடுகிறார். இதனால் ஒரு நாளைக்கு மட்டும் 4 லட்சம் செலவு செய்கிறார். மோடி குஜராத் முதல்வர் ஆனதிலிருந்தே சாப்பிடுகிறார். அவருடைய பழைய புகைப்படத்தை பார்த்தேன். அது 35 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. அதில் அவர் கருப்பாக உள்ளார். தற்போது இந்த காளானை சாப்பிட்டு சிவப்பாக மாறி இருக்கிறார். பிரதமர் மோடி காளான்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 4 லட்சம் செலவழிக்கிறார். ஒரு மாதத்திற்கு பார்த்தால் 1 கோடி 20 லட்சம் செலவு செய்கிறார்." என்று தெரிவித்துள்ளார். இதே போன்று பிரதமர் மோடி உடுத்தும் ஆடை மட்டும் 6 லட்சமாம், ஒரு நாளைக்கு மட்டும் ஆடைக்கு 6 லட்சம் செலவு செய்கிறார் என்று பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

taiwan mushroom

மோடி காளான் சாப்பிட்டு கலரானார் - காங்கிரஸ் தலைவர்