சமூக வலைத்தளத்தில் பிரகாஷ்ராஜ் மீதான விமர்சனத்தை நீக்கிய பாஜக எம்பி

prakash raj tweet

 பிரதமர் மோடி, கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் மெளனமாக இருப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு செய்திருந்தார். இதற்கு பதிலாக மைசூர் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா அவரை விமர்சித்திருந்தார்.  பாஜக எம்பியின் இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டிஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில் தற்போது பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பிரகாஸ்ராஜ் மீதான விமர்சனத்தை தற்போது நீக்கியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது கருத்து பதிவிட்டுள்ளார். அதில் "சமூக வலைத்தளத்தில் அந்த விமர்சனத்தை அகற்றினாலும் மக்கள் மனதில் அது நீங்காது. நடப்பவை அனைத்தையும் மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் நீக்கிய அந்த பதிவுகள் என்னிடம் உள்ளது. தேவையென்றால் அந்த பதிவினை தாராளமாக தர இருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


சமூக வலைத்தளத்தில் பிரகாஷ்ராஜ் மீதான விமர்சனத்தை நீக்கிய பாஜக எம்பி