ads

குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் - ஆட்சியை கைப்பற்றிய பாஜக

gujarat election 2017

gujarat election 2017

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணியிலிருந்து தொடங்கியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி குஜராத்தில் 182 இடங்களிலும் இமாச்சல பிரதேசத்தில் 68 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் பிரதமர் மோடியின் சொந்த மண்ணான குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து ஆறாவது முறையாக வென்று ஆட்சியை அமைத்துள்ளது. இந்த தேர்தல் முடிவில் பாரதிய ஜனதா கட்சி 108 இடங்களை பிடித்து காங்கிரஸ் கட்சியை முந்தியுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 73 இடங்கள் மட்டுமே பிடித்தது. 

குஜராத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த 22 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியை விட 10 சதவீதம் குறைவான வாக்குகள் எடுத்து வந்தது. பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்பின்படி பாஜக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெரும் என்று தெரிவித்தது. அதன்படி தற்போது குஜராத்தில் 105 இடங்களை பிடித்து காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளியுள்ளது. மேலும் இமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் 23 தொகுதியிலும் மற்றவை 3 என்ற கணக்கில் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சியை வென்றுள்ளது. ஆகவே இரு மாநில சட்டசபை தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

modi vs rahul gandhimodi vs rahul gandhi

குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் - ஆட்சியை கைப்பற்றிய பாஜக