ads

பிப்ரவரி 21 இல் கட்சி பெயரை அறிவிக்கும் கமல்ஹாசன்

kamal haasan party name announced at February 21

kamal haasan party name announced at February 21

அரசியலில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய முன்னணி நடிகர்கள் விரைவில் களம் காண உள்ளனர். அதற்கான பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் ரஜினிகாந்த் டிசம்பர் 31-ஆம் தேதி அரசியலில் வருவது உறுதி என தெரிவித்து பல்வேறு இடங்களில் உள்ள ரசிகர்களை இணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனை அடுத்து ரஜினியின் ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக பெயர் மாற்றப்பட்டது.

நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் அமெரிக்கா சென்று ஈடுபட்டு வந்தார். தற்போது அதற்கான பணிகள் முடிந்த நிலையில் நேற்று, தனது கட்சியின் பெயரை பிப்ரவரி 21-ஆம் தேதி அறிவித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன் என்று அறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பில் "என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றிகள் சொல்லியிருக்கிறேன்.

சொல்லில் சொன்ன நன்றியை தாண்டி நிறைய கடமைகள் இருக்கின்றன. அக்கடமைகளின் துவக்கமாக என் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து பிப்ரவரி 21-ஆம் தேதி துவங்க இருக்கிறேன். ஆரம்ப கால சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்." என்று அவர் தெரிவித்துள்ளார். 

kamal haasan party name announced at February 21kamal haasan party name announced at February 21

பிப்ரவரி 21 இல் கட்சி பெயரை அறிவிக்கும் கமல்ஹாசன்