ads

ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த கமல் ஹாசன்

kamalhaasan tweet about rahulgandhi

kamalhaasan tweet about rahulgandhi

காங்கிரஸ் கட்சியின் புது தலைவர் பதவிக்கு கடந்த 11-ஆம் தேதி தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்ததால் அவரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் புது தலைவராக போட்டியின்றி ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டார். இதற்கான சான்றிதழ் 16-ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் 87 வது தலைவராக பொறுப்பேற்றார். மேலும் ஜவஹர்லால் நேருவின் பரம்பரையில் 6 வது தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் புது தலைவராக ராகுல் காந்தியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.  இதனை அடுத்து ராகுல் காந்திக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகத்துடகொண்டாடியும் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் கமல் ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் "காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் இருக்கை உங்களை வரையறுக்காது ஆனால் நீங்கள் உங்கள் நிலையை வரையறுக்க முடியும். உங்கள் மூப்பர்களை நான் பாராட்டினேன். நீங்கள் நிச்சயமாக மக்களுக்கு சேவை செய்து என்னுடைய பாராட்டுகளையும் பெறுவீர்கள். உங்கள் தோல்கள் தான் உங்களுக்கு பலம்" என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த கமல் ஹாசன்