ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் யூசப் பதான்

yusuf pathan suspended for dope violation

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் யூசப் பதான் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டதால் 5 மாதங்களுக்கு அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது  தடை விதித்துள்ளது. சென்ற ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரில் பரோடா அணியில் பதான் விளையாடிய போது அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தான டெர்புடலின் (Terbutaline) அவரது உடலில் இருப்பது கண்டறியப்பட்டது. யூசப் பதான் உட்கொண்ட இருமல் மருந்தான புரோஷீட் (Brozeet) இல்  டெர்புடலின் (Terbutaline) உட்பொருளாக இருந்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள் எந்தவித முன் அறிவிப்பின்றி இந்த மருந்தை உட்கொள்ள முடியாது.இது குறித்து யூசப் பதான் அளித்த விளக்கத்தை பிசிசிஐ இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்றுக் கொண்டது. ஆனாலும் அவரை ரஞ்சி தொடருக்கு தேர்வு செய்ய வேண்டாம் என பரோடா அணிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரில் சிக்கிய இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் ஆவார். கடந்த 2012-ஆம் ஆண்டில் டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பிரதீப் சங்வான் டெர்புடலின் (Terbutaline) பயன் படுத்தியதை கண்டறியப்பட்டதால் அவருக்கு 18 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.கிரிக்கெட் வீரர் யூசப் பத்தானுக்கு விதிக்கப்பட்ட தடையானது பின்தேதியின் இடைநீக்கமாக விதித்துள்ளது. இந்த தடையானது கடந்த 2017 ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் வரும் ஜனவரி 14-வரை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யூசப் பதான் தடை நீக்கம் செய்த பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் யூசப் பதான்