மெஸ்சியின் சாதனையை சமன் செய்த ரொனால்டோ

cristiano ronaldo wins ballon d

பலோன் டி ஆர் விருது ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடும் கால்பந்து வீரருக்கு கால்பந்து மேகஸின் சார்பில் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான 30 சிறந்த வீரர்கள் அடங்கிய பட்டியலில் ரொனால்டோ, மெஸ்சி, நெய்மர் உள்பட 30 பேர் இடம்பெற்றிருந்தனர். இந்த விருதை இதுவரை மெஸ்சி ஐந்து முறையும், ரொனால்டோ நான்கு முறையும் பெற்றுள்ளனர். லா லிகா, சாம்பியன் லீக் டைட்டிலை இந்த ஆண்டு ரியல் மார்டிட் அணி இந்த ஆண்டு வென்றுள்ளது. இதற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ முக்கிய காரணமாக இருந்தார். இதன் மூலம் மெஸ்சின் சாதனையை ரொனால்டோ சமன் செய்வார் என்று ரசிகர்கள் அனைவராலும் பேசப்பட்டது. இதனை அடுத்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே பிரான்ஸ் தலைநகரான பாரிசில் இந்த விருது வழங்கும் விழா நடந்தது. இதில் இந்த ஆண்டிற்கான பலோன் டி ஆர் விருதை ரொனால்டோ தட்டி சென்றார். இதன்மூலம் ஐந்தாவது முறையாக பலோன் டி ஆர் விருதை பெற்று மெஸ்சியின் சாதனையை சமன் செய்துள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக வழங்கப்பட்ட இந்த விருதை ரொனால்டோ மற்றும் மெஸ்சி இருவரும் மாறி மாறி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.