ads

ஒரே ஓவரில் 6 சிக்ஸரை விளாசிய ஜடேஜா

ravindra jadeja

ravindra jadeja

ஜாம்நகர் - அம்ரேலி அணிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான T20 போட்டி நேற்று குஜராத்தில் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் ஜாம்நகர் அணி விளையாடியது. இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தின் 10 வது ஓவரில் களமிறங்கினார். தொடர்ந்து விளையாடிய ஜடேஜா 15 ஓவரில் 6 பந்துகளையும் சந்தித்து 6 சிக்ஸர்களை விளாசி அசத்தியுள்ளார். முன்னதாக இந்தியா அணியில் கிரிக்கெட் வீரர்கள் ரவி சாஸ்திரி மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகியோர் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை அடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா இந்த சாதனையை புரிந்துள்ளார். 

இந்த ஓவரை அம்ரேலி அணியின் நீலம் வம்சா வீசியுள்ளார். இதனை அடுத்து ஜடேஜா ஆட்டத்தின் 19 வது ஓவரில் அவுட் ஆனார். இந்த போட்டியில் ஜடேஜா மட்டும் 69 பந்துகளை சந்தித்து 154 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 15 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். ஜாம்நகர் அணி இறுதியில் 20 ஓவர் முடிவில் 239/6 என்ற கணக்கில் இருந்தது. இதனை அடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அம்ரேலி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. போட்டியின் இறுதியில் 121 ரன்கள் வித்தியாசத்தில் ஜாம்நகர் அணி அபார வெற்றி பெற்றது.

ஒரே ஓவரில் 6 சிக்ஸரை விளாசிய ஜடேஜா