சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து பயிற்சியும் வசதியும் செய்து தரப்படும் - மத்திய விளையாட்டு துறை மந்திரி

sports authority of india new announcement

 நேற்று டெல்லியில் பேட்டி அளித்த மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோர் "(ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா) இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும். விளையாட்டில் ஆணையம் என்ற வார்த்தைக்கு இடமில்லை. ஒரு சேவையாக விளையாட்டு கருதப்படுகிறது. இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு ஒதுக்கப்படும் நிதி விளையாட்டு அல்லாத பணிகளுக்கும் திருப்பி விடப்படுகிறது. வெளிநபர்கள் இது போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தப்படுவார்கள். இனிமேல் விளையாட்டு திறனை வளர்ப்பதில் மட்டும் இந்தியா விளையாட்டு ஆணையம் செயல்படும். அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் சிறந்த வீரர்களை அடையாளம் காணும் திட்டம் செயல்படுத்த படுகிறது. சிறந்த வீரர்களாக 8 வயது முதல் 18 வயது வரை தேர்வு செய்யப்படுவோருக்கு சிறந்த பயிற்சியும், வசதியும் செய்து தரப்படும். விளையாட்டு வீரர்களுக்கு குறைந்தபட்சமாக வேலைவாய்ப்பில் வழங்க வேண்டிய இடஒதுக்கீட்டுக்கான அளவு கோல் நிர்ணயிக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.


சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து பயிற்சியும் வசதியும் செய்து தரப்படும் - மத்திய விளையாட்டு துறை மந்திரி