ads

பிராகி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன்கள்

bragi new headphones

bragi new headphones

இந்தியாவில் தற்போது ஜெர்மன் நாட்டு நிறுவனமான பிராகி புதிய இரண்டு ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பிராகி - டேஷ் ப்ரோ (BRAGI - THE DASH PRO) மற்றும் பிராகி - தி ஹெட்போன் (BRAGI - THE HEADPHONE) ஆகிய இரண்டு சாதனங்களும் பிராகியின் இணைய வர்த்தக தலமான ஹெட்போன் சோனில் கிடைக்கிறது. மேலும் இந்தியாவின் முன்னணி வர்த்தக தலமான அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் ஆகிய தளங்களிலும் கிடைக்கிறது. இந்த சாதனங்கள் விண்டோஸ், ஆப்பிள், ஆண்ட்ராய்டு போன்ற இயங்குதளங்களில் இயங்கக்கூடிய அம்சங்களை கொண்டுள்ளது. பிராகி - டேஷ் ப்ரோ (BRAGI - THE DASH PRO) 4ஜிபி ரேமை கொண்டுள்ளது. 

இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 5மணி நேரம் தாங்கக்கூடிய திறன் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை தரக்கூடியது. தி டேஷ் ப்ரோவில் (BRAGI - THE DASH PRO) இருக்கக்கூடிய பயோமெட்ரிக் சென்சார்கள் கொண்டு பயன்படுத்துவோரின் நடக்கும் தூரம், நீச்சல் செய்யும் தூரம் மற்றும் மூச்சு சார்ந்த தகவல்களை ஒவ்வொரு பயிற்சியை மேற்கொள்ளும் போதும் வழங்கப்படும். இதனுடன் 'IPX7' சான்று கொண்டுள்ளதால் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய இயர்போன் பிராகி இயங்குதளத்தில் கொண்டிருப்பதால், பயனரின் அசைவுகளை கொண்டு மெனுவை இயக்குகிறது. 

மேலும் பிராகி - தி ஹெட்போன் (BRAGI - THE HEADPHONE) ப்ளூடூத் 4.0, ஒரு முறை சார்ஜ் செய்தால் ஆறு மணி நேர தாங்கக்கூடியது மற்றும் வெளிப்புற சத்தத்திற்கு ஏற்ப இசையின் ஒலியை இயர்போன்களை ஆஃப் செய்யாமல் மாற்றிக்கொள்ளும் வசதி கொண்டுள்ளது. தி ஹெட்போன் சாதனம் நாவல்ஸ் டிஜிட்டல் மைக்ரோபோன் கொண்டுள்ளது, ஹெட்போன் இயர்பட்ஸ்களில் வழங்கப்பட்டுள்ள பட்டன்களை கொண்டு இசையை கட்டுப்படுத்தவும், அதன் சத்தத்தை மாற்றவும் முடியும். இந்தியாவில் தி டேஷ் ப்ரோ மற்றும் தி ஹெட்போன் முறையே ரூ.27,999 மற்றும் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

bragi new headphonesbragi new headphones
bragi new headphonesbragi new headphones

பிராகி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன்கள்