ஏஆர் ரகுமான் இசையில் சிவகாத்திகேயனின் அடுத்த பட தகவல்

sivakarthikeyan new movie with ar rahman music

'வேலைக்காரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' படத்தினை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக சமந்தா இணைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் 75% முடிவடைந்து இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் இப்படத்திற்கு 'சீம ராசா' என்று டைட்டில் வைத்திருப்பதாக தகவல் வெளிவந்தது. விரைவில் படக்குழு இது குறித்த தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.    இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு புது படத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த புது படத்தினை 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்திற்காக கடந்த ஓராண்டு காலமாக ப்ரீ ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வரும் படக்குழு தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தில் இசையமைக்க 'இசை புயல்' ஏ ஆர் ரகுமானிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 'ரெமோ', 'வேலைக்காரன்', 'சீம ராச' படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது நண்பர் பெயரில் இந்த புது படத்தினையும் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர் - நடிகை சம்மந்த பட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏஆர் ரகுமான் இசையில் சிவகாத்திகேயனின் அடுத்த பட தகவல்


  Tags : 
 • actor sivakarthikeyan new film team up with ar rahman
 • sivakarthikeyan new film team up with ar rahman
 • sivakarthikeyan team up with ar rahman
 • sivakarthikeyan new film
 • sivakarthikeyan new film official
 • indru netru naalai director ravikumar
 • indru netru naalai director ravikumar next film
 • sivakarthikeyan indru netru naalai director ravikumar team up with ar rahman
 • ar rahman music
 • sivakarthikeyan
 • indru netru naalai
 • ஏஆர்.ரகுமான் இசையில் சிவகாத்திகேயனின் அடுத்த பட தகவல்
 • ஏஆர்.ரகுமான் இசையில் சிவகாத்திகேயனின் புது படம்
 • இன்று நேற்று நாளை
 • இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார்
 • சிவகாத்திகேயனின் அடுத்த பட தகவல்
 • சிவகார்த்திகேயனின் புது பட தகவல்