நடிகை அனுஷ்காவின் பாக்மதி ட்ரைலர் வெளியீடு

bhagmati movie official trailer

'அருந்ததி' படத்தின் மூலம் பிரபலமான நடிகை அனுஷ்கா, தமிழில் வேட்டைக்காரன், தெய்வ திருமகள், வானம், சிங்கம், லிங்கா, பாகுபலி, ருத்ரம்மா தேவி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதில் சிங்கம், பாகுபலி, அருந்ததி போன்ற படங்கள் வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களாக அமைந்தவை. இது தவிர தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் 40 கும் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பாகுபலி, பாகுபலி 2 மூலம் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்த இவர் தற்போது 'பாக்மதி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜி.அசோக் இயக்குகிறார். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு எஸ்.தாமன் இசையமைக்கிறார். இந்த படத்தை யுவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் சார்பில் வம்சி கிருஷ்ண ரெட்டி தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் அனுஷ்கா, ஆதி, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அனுஷ்காவின் பிறந்த நாளான நவம்பர் 7-இல் படக்குழு வெளியிட்டது. இதனை தொடர்ந்து வெளிவந்த 'பாக்மதி' படத்தின் போஸ்டர், டீசர் போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஜனவரி 26 இல் வெளியாகவுள்ளது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் ட்ரைலரை இன்று மதியம் 1:30 PM மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.


நடிகை அனுஷ்காவின் பாக்மதி ட்ரைலர் வெளியீடு


  Tags : 
 • Bhaagamathie movie official trailer
 • bhagmati movie official trailer release today
 • anushka shetty new movie bhagmati trailer
 • bhagmati movie cast
 • bhaagamathie movie
 • bhagmati movie story
 • anushka shetty new movie bhaagamathie trailer today
 • bhagmati movie first look poster
 • bhagmati movie teaser
 • Bhagmati movie
 • bhagmati movie stills
 • நடிகை அனுஷ்காவின் பாக்மதி ட்ரைலர்
 • பாக்மதி ட்ரைலர்
 • பாக்மதி புது தகவல்
 • பாக்மதி படத்தின் தகவல்
 • பாக்மதி பர்ஸ்ட் லுக்
 • அனுஷ்கா பாக்மதி ட்ரைலர் வெளியீடு
 • நடிகை அனுஷ்காவின் பாக்மதி ட்ரைலர் வெளியீடு