வெற்றி படம் வெளியீடு தேதியில் பலூன்

வெற்றி படம் வெளியீடு தேதியில் பலூன்

'எங்கேயும் எப்போது' படத்தினை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெய், அஞ்சலி பலூன் படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தினை புதுமுக இயக்குனர் சைனீஸ் இயக்கியுள்ளார். காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை திலீப் சுப்பராயன் தயாரித்துள்ளார். நவம்பர் 27ம் தேதி வெளிவருவதாக இருந்த நிலையில் திடிரென்று 29ம் தேதிக்கு மாற்றப்பட்டது. 



முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளில் வெளிவந்து கொண்டிருந்த படங்களை தாண்டி, தற்பொழுது வெற்றிப்படங்கள் கொடுத்த தேதி, முன்னணி நடிகர் படங்கள் வெளிவந்த தேதி போன்றவைகளின் அடிப்படையில் படங்களை வெளியிடுகின்றனர்.  



இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஆர் சரவணன் ஒளிப்பதிவில் ஈடுபட்டுள்ள இப்படத்தின் வெளிவரும் தேதியில் சென்ற வருடம் துருவங்கள் 16 படம் வெளிவந்து அதிகளவு வெற்றியை பெற்றிருந்தது. இதன் காரணத்தினால் பலூன் படத்தின் வெளியீடு மாற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 



இதற்கு உதாரணமாக அஜித் நடித்த வேதாளம் படத்தின் வெளியீட்டில் தேதியில் நயன்தாராவின் அறம் படம் வெளியிட்டுள்ளார்.


வெற்றி படம் வெளியீடு தேதியில் பலூன்