டிசம்பரில் வெளியாகும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'

Basker oru rascal

இயக்குனர் சித்திக் எழுத்து மற்றும் இயக்கத்தில்  2015-இல் மலையாளத்தில் வெளியான படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. இந்த படம் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மம்மூட்டி, நயன்தாரா, ஜே.டி.சக்ரவர்த்தி, சனூப் சந்தோஷ், பேபி அனிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அந்தோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரிப்பில் தீபக் தேவ் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் தமிழ் ரீமேக் தற்போது நடந்து வருகிறது. தமிழில் இந்த படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்று தலைப்பில் வெளியாகவுள்ளது.



இந்த படத்தையும் சித்திக் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் அரவிந்சாமி, அமலா பால், மாஸ்டர் ராகவன், நடிகர் சித்திக் மற்றும் 'தெறி' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நானிகா நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஹரிஷினி மூவிஸ் தயாரிப்பில் அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கிறார். மேலும் இந்த படம் அடுத்த மாதம் டிசம்பரில் வெளிவரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.


டிசம்பரில் வெளியாகும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'