சமுத்திரக்கனியின் நாடோடிகள் இரண்டாம் பாகம்

samuthirakani and sasikumar joined as nadodikal 2

நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 2009ம் ஆண்டில் வெளிவந்த 'நாடோடிகள்' நட்புக்கு எடுத்து காட்டாக அமைந்து ரசிகர்கள் மத்தியிலும், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த படத்தில் விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபினயா,கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் இயக்குனர் சமுத்திரக்கனி, சசிகுமார் இருவரும் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தனர். இதற்கு அடுத்த படியாக சமுத்திரக்கனி இயக்கிய 'போராளி' படத்தின் மூலம் இரண்டாவது முறையாக சசிகுமார் இணைந்து நடிப்பில் நல்ல வெற்றியை பெற்றிருந்தார்.இந்நிலையில் சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. முதல் முறையாக இணைந்த நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு சமுத்திரக்கனி முடிவுசெய்துள்ளார். இந்த இரண்டாம் பாகத்திலும் நாயகனாக சசிகுமார் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் துவங்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் இப்படத்தை இயக்கும் சமுத்திரக்கனி தயாரிப்பு பணியிலும் ஈடுபட உள்ளார். விரைவில் படத்தின் சம்மந்தப்பட்ட தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடோடிகள், போராளி படத்தினை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள இக்கூட்டணியின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.        


சமுத்திரக்கனியின் நாடோடிகள் இரண்டாம் பாகம்


  Tags : 
 • samuthirakani and sasikumar joined for nadodigal 2
 • samuthirakani and sasikumar may team up for nadodigal 2
 • nadodigal 2
 • sasikumar new film
 • sasikumar upcoming movie
 • samuthirakani and sasikumar joined as new film
 • சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாக்கவும் சசிகுமார் படத்தின் இரண்டாம் பாக
 • நாடோடிகள் 2
 • சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் 2
 • சசிகுமார் புது பட தகவல்
 • சமுத்திரக்கனி சசிகுமார் கூட்டணியில் நாடோடிகள் 2
 • சமுத்திரக்கனி
 • சசிகுமார்
 • சமுத்திரக்கனியின் நாடோடிகள் இரண்டாம் பாகம்