சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் ராமின் பேரன்பு

peranbu movie screened in international film festival

நடிகர் மற்றும் இயக்குனருமான ராம் நடிப்பில் அடுத்த மாதம் பிப்ரவரி 9-ஆம் தேதி 'சவரக்கத்தி' படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் ராமுடன் இயக்குனர் மிஸ்கின் வில்லன் கதாபத்திரத்தில் இணைந்துள்ளார். கோமாளித்தனமான மனிதர்கள் சமூகத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை மையப்படுத்தி இந்த படம் அமைந்துள்ளது. இதனை அடுத்து இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி நடிப்பில் 'பேரன்பு' படம் தற்போது உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.



இந்த படத்தில் 'தங்க மீன்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான சாதனா நடித்துள்ளார். நடிகர் மம்முட்டி ஜோடியாக அஞ்சலி இணைந்துள்ளார். மேலும் நடிகர் சரத்குமார், சமுத்திரக்கனி முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் மலையாள மாடல் திருநங்கையான அஞ்சலி அமீர் நடிக்க உள்ளார். வழக்கமாக இயக்குனர் ராம் இயக்கும் அனைத்து படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா  இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். தமிழ், மலையாளம் மொழிகளில் வரும் மே மாதம் வெளியாகவுள்ள இந்த படத்தில் வடிவுக்கரசி, லிவிங்ஸ்டன், சுராஜ் வெஞ்சாரமூட், அருள்தாஸ், சித்திக் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.



இந்த படத்தை ஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் தயாரித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை அமைத்துள்ளார். சமீபத்தில் கொடைக்கானலில் சாதனா, மம்முட்டி ஆகியோரது காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த படம் 47-வது ரோட்டர்டாம் (நெதர்லாந்து) சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளதாக இயக்குனர் ராம் அவரது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் ராமின் பேரன்பு


  Tags :