இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் பாடல்கள் மற்றும் லிரிக்கல் வீடியோ

By : Velu       Published On : Feb 09, 2018 12:28 IST    
iravukku aayiram kangal movie songs and lyrical videos iravukku aayiram kangal movie songs and lyrical videos

நடிகர் அருள்நிதி நடிப்பில் தற்போது 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' மற்றும் 'புகழேந்தி எனும் நான்' போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் மு மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இசையை இன்று வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. அதன்படி தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.மேலும் இந்த படத்தின் லிரிக்கல் விடியோவை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை 24PM ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது. இந்த படத்தில் அருள்நிதி, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாயா சிங், சுஜா வருநீ, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லட்சுமி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன், அச்யுத் குமார், அபிநயஸ்ரீ ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படம் இரவு நேரங்களில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு தயாராகி வருகிறது. இந்த படத்தில் அருள்நிதி டேக்சி ட்ரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஒரு நாள் இரவில் பயணிக்கும் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் டில்லி பாபு அக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.


இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் பாடல்கள் மற்றும் லிரிக்கல் வீடியோ