வைரலாகும் தளபதி 62 படத்தின் சண்டை காட்சிகள்

By : Velu       Published On : Feb 12, 2018 16:34 IST    
thalapathy 62 movie fight scene leaked thalapathy 62 movie fight scene leaked

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது விஜயின் 62 வது படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு தொடர்ந்து மூன்று வாரங்கள் நடக்க உள்ளது.



கொல்கத்தாவில் முக்கியமான சண்டை காட்சிகள் எடுக்க உள்ளதாக தகவல்கள் முன்பு வெளியானது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தலத்தில் நிகழ்ந்த சண்டை காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. இந்த வீடியோவில் விஜய் ஒருவரை தூக்கி அடிப்பது, மற்றொரு வீடியோவில் பைக்கில் தப்பித்து செல்லும் ரவுடிகளை பிடித்து உதைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.



இந்த படத்தின் சண்டை பயிற்சி இயக்குனர்களாக பிரபல மாஸ்டர்கள் ராம் மற்றும் லக்ஷ்மணன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், 'பைரவா' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார். இந்த படத்திற்கும் 'மெர்சல்' படத்தை தொடர்ந்து இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.



இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், விவசாயிகளின் பங்களிப்பையும் சொல்லும் விதமாக உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தீபாவளி பண்டிகைக்கு வெளிவரவுள்ளது.