ads

சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் மகள் இந்தியா வருகை

ivanka trump arrived india

ivanka trump arrived india

ஐதராபாத்தில் இன்னும் சற்று நேரத்தில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் மகள் இவாங்கா ட்ரம்ப் இன்று காலை வந்தடைந்தார். இந்த மாநாட்டை பிரதமர் மோடி தற்போது தொடங்கி வைத்துள்ளார். இன்று காலை வந்தடைந்த இவாங்கா ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். 

இதற்கு முன்னதாக மத்திய வெளியுறவு மந்திரி சுஸ்மா சுவராஜ் அவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பிரதமர் மோடி மற்றும் இவாங்கா ட்ரம்ப் வருகையை முன்னிட்டு ஐதராபாத் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே  ஐதராபாத்தில் பிச்சை எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் மகள் இந்தியா வருகை