இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் அறிவிப்பு - பாலஸ்தீனர் கடும் எதிர்ப்பு

donald trump jerusalem

யூதம், கிறிஸ்துவம் மற்றும் முஸ்லீம் மதத்தினருக்கு அமைதியின் உறைவிடமாகவும், புனித தூயகமாகவும் ஜெருசலேம் விளங்குகிறது. மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. ஜெருசலேம்  தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தற்போது 801,000 மக்கள் அடர்த்தியும் 125 சதுர கி.மீ (48.3 சதுர மைல்) பரப்பளவு  கொண்ட ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.  அதிபர் ட்ரம்ப் தனது அறிவிப்பை அறிவித்த சில மணி நேரங்களிலேயே இயேசு பிறந்ததாக கூறப்படும் பெத்தலேகம் நகரில் உள்ள பழமையான தேவாலயத்தில் உள்ள கிறிஸ்துமஸ் மரத்தில் உள்ள விளக்கை அனைத்து அங்குள்ள கிறிஸ்துவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். ட்ரம்பின் இந்த முடிவிற்கு ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பிரிட்டன், ஜெர்மனி, துருக்கி, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளன. இதேபோல் பாலஸ்தீனியர்கள் ரமல்லா நகரில் திரண்டு அதிபர் டிரம்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பி எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனை அடுத்து இந்த போராட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்க நாளை  ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூட இருக்கிறது. 

donald trump jerusalem

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் அறிவிப்பு - பாலஸ்தீனர் கடும் எதிர்ப்பு