ads

ஒரே வாரத்தில் பூமியை கடந்த இரண்டு விண்கற்கள்

asteroid 2018 cb crosses earth yesterday

asteroid 2018 cb crosses earth yesterday

வளிமண்டலத்தில் பல்லாயிரக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகிறது. ஆனாலும் சில சமயங்களில் விண்கற்கள் பூமியின் புவிஈர்ப்பு பாதைக்குள் நுழைந்து விடுகிறது. இந்த கற்கள் நேரடியாக பூமியை வந்து தாக்கினால் பலத்த சேதம் ஏற்படும். இதனை தடுக்க இயற்கை நமக்கு சில பாதுகாப்பு அம்சங்களை அளித்துள்ளது. இந்த கற்கள் பூமியின் ஈர்ப்பு பாதையில் நுழையும் போது காற்றில் ஏற்படும் உராய்வு காரணமாக அந்த கற்கள் தீப்பிடித்து எரிந்து, பூமியை தாக்குவதற்கு முன்பாகவே எரிந்து சாம்பலாகி விடும்.

இதனால் தான் விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. இருந்தாலும் சில சமயங்களில் விண்கற்கள் முழுமையாக எரிந்து சாம்பலாகாமல் பூமியின் மீது விழுவதுண்டு. ஆனால் அந்த விண்கற்களால் சிறு சிறு பாதிப்புகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது.இந்நிலையில் தற்போது 40 மீ நீளமுள்ள விண்கல் ஒன்று நேற்று பூமியை கடந்துள்ளது. இந்த விண்கல்லுக்கு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் 2018 சிபி என்று பெயர் வைத்துள்ளனர். இந்த விண்கல்லானது பூமியில் இருந்து சுமார் 64,000 கிமீ தூரத்தில் கடந்து சென்றுள்ளது.

இந்த விண்கல்லை ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஞாயிற்று கிழமை 4-ஆம் தேதி பூமியை நோக்கி வருவதாக கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு இந்த விண்கல் பூமியை 9-ஆம் தேதி 39,000 மைல் தூரத்தில் பூமியை கடக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்று கூறப்படுகிறது. இந்த விண்கல் பூமியின் புவிஈர்ப்பு விசைக்கு அப்பால் கடந்து செல்வதால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும் கடந்த செவ்வாய் கிழமையன்று இதே போன்ற ஒரு விண்கல் பூமி அருகே கடந்து சென்றுள்ளது. தற்போது ஒரே வாரத்தில் இரண்டாவது விண்கல்லாக 2018 சிபி என்ற விண்கல் கடந்து செல்கிறது.

ஒரே வாரத்தில் பூமியை கடந்த இரண்டு விண்கற்கள்