புதுவிதமான தொழில்நுட்பத்தில் தலை மாற்று அறுவை சிகிச்சை

human head transplant surgery

வளர்ந்து வரும் மருத்துவ அறுவை சிகிச்சையில் நாளுக்கு நாள் செயற்கை கால், கை, இதய அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை  போன்ற தொழில் நுட்பங்கள் வளர்ந்து வருகிறது. இதனை அடுத்து தற்போது மனிதர்களுக்கு தலை மாற்றும் அறுவை சிகிச்சை நடத்தும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். ரசியாவை சேர்ந்த வெலேரி ஸ்ப்ரிதி நோவ் என்பவருக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்போவதாக இத்தாலியை சேர்ந்த மருத்துவர் செர்ஜியோ கனோவெரா அறிவித்தார். இதற்கான முயற்சிகளில் கானோவேரா ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு சடலத்திற்கு தலை மாற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. மருத்துவர் செர்ஜியோ கனோவெரா தலைமையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த சிகிச்சைக்கு புதுவிதமான தொழில்நுட்பத்துடன் சுமார் 18 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. நரம்புகள், ரத்தநாளங்கள் உள்ளிட்டவை நவீன தொழில் முறையில் தலையுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து உயிருள்ள மனிதர்களுக்கு தலைமாற்றும் அறுவை சிகிச்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


புதுவிதமான தொழில்நுட்பத்தில் தலை மாற்று அறுவை சிகிச்சை