ads

அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ள 'ஐகேன்' அமைப்பு

2017 nobal prize winner

2017 nobal prize winner

'ஐகேன்' (International Campaign to Abolish Nuclear Weapons - ICAN) அல்லது சர்வதேச அணு ஆயுத ஒழிப்பு பிரச்சார குழு உலகில் பல்வேறு நாடுகளில் அமைந்த ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு 2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு தற்போது சுமார் 101 நாடுகளில் உள்ள 468 அமைப்புகள் இணைந்து சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டுள்ளது. ஐகேன் அமைப்பு உலகில் அணு ஆயுதங்களை ஒழிக்கவும், அணு ஆயுதங்களில் ஏற்படும் பேரழிவுகளையும், விளைவுகளையும் சுட்டிக்காட்டி விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. 

வடகொரியாவின் அணு ஆயுத வெறி செயலுக்கு எதிராக சர்வதேச சமூகத்தை ஒன்றிணைத்ததிலும், ஏராளமான அணு ஆயுதங்களா குவித்து வைத்திருந்த ஈரான் நாட்டை ஆயுத பரவல் தடை உடன்படிக்கையில் கையெழுத்திட வைத்ததிலும், அணு ஆயுதங்களின் உற்பத்தியை குறைத்ததிலும் இந்த அமைப்பின் பணி முக்கியமானது. இந்நிலையில் 'ஐகேன்' அமைப்பு 2017 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியிருந்தது. இதற்கான அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் நோபல் கமிட்டியின் தலைவர் பெரிட் ரீய்ஸ்-ஆண்டர்சன் அறிவித்தார். தற்போது நார்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் அமைதிக்கான நோபல் பரிசையும், பாராட்டு பட்டையத்தையும் ஐகேன் அமைப்பின்  பிரதிநிதி செட்ஸுக்கோ துர்லோ மற்றும் அமைப்பின் தலைவர் பீட்ரைஸ் ஃபிஹ்ன் ஆகியோர் நேற்று பெற்றுக்கொண்டனர். 

2017 nobal prize winner2017 nobal prize winner

அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ள 'ஐகேன்' அமைப்பு