Advertisement

2017 ஆம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் விருது வழங்கும் விழா

       பதிவு : Jan 18, 2018 12:28 IST    
2017 ananda vikatan awards ceremony 2017 ananda vikatan awards ceremony
Advertisement

ஒவ்வொரு வருடமும் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் சிறந்த படங்கள், சிறந்த இயக்குனர்கள் போன்ற கலைஞர்களுக்கு ஆனந்த விகடன் ஏராளமான விருதுகளை வழங்கி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகை, நடிகர், சிறந்த படம் குறித்த பட்டியல் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது. அதன்படி இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கியுள்ளது.

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், விஜய், விஜய் சேதுபதி, நயன்தாரா, ஏஆர் ரஹ்மான், இளையராஜா, அனிருத் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்று விருதுகளை பெற்றுள்ளனர். இதில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளி அன்று வெளியாகி உலகெங்கும் நல்ல வரவேற்பை பெற்ற 'மெர்சல்' படத்திற்கு சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டது. இந்த விருதை நடிகர் கமல்ஹாசன் தலைமையில் விஜய்க்கு வழங்கப்பட்டது. இதில் அவசியம் கருதியே சர்ச்சை வசனங்களை பேசியதாகவும் ஆதரவு அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி எனவும் தெரிவித்தார்.

 

இதனை அடுத்து புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில்  2017-இல் ஜூலை மாதம் வெளியாகி 100 நாட்களை கடந்து ஓடிய 'விக்ரம் வேதா' படத்திற்கு சிறந்த வில்லன் விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'அறம்' படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவிற்கு வழங்கப்பட்டது. மேலும் சிறந்த இசையமைப்பாளர் விருது இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுக்கு 'மெர்சல்' படத்திற்காக வழங்கப்பட்டது. மேலும் சிறந்த புதுமுக நடிகைக்கான விருது நடிகை அதிதி பாலனுக்கு 'அருவி' படத்திற்காக வழங்கப்பட்டது.

2017 ananda vikatan awards ceremony2017 ananda vikatan awards ceremony
2017 ananda vikatan awards ceremony2017 ananda vikatan awards ceremony
2017 ananda vikatan awards ceremony2017 ananda vikatan awards ceremony
2017 ananda vikatan awards ceremony2017 ananda vikatan awards ceremony
2017 ananda vikatan awards ceremony2017 ananda vikatan awards ceremony
2017 ananda vikatan awards ceremony2017 ananda vikatan awards ceremony

2017 ஆம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் விருது வழங்கும் விழா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்

Advertisement