நடிகை சமந்தாவால் சென்னையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

       பதிவு : Apr 15, 2018 18:38 IST    
நடிகை சமந்தாவால் சென்னையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு நடிகை சமந்தாவால் சென்னையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

செங்குன்றத்தில் உள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றை திறந்து வைக்க நடிகை சமந்தா இன்று மதியம் சென்னை வந்தார். இதனால் ஏராளமான ரசிகர்கள் இன்று காலை முதலே சமந்தாவைக் காண காத்துக்கொண்டு இருந்தனர். ரசிகர்களை கட்டுப்படுத்த தடுப்புகள் போடப்பட்டு இருந்தன . மேலும் காவலர்களும் குவிக்கப்பட்டு இருந்தனர். திறப்பு விழாவிற்கு வந்த சமந்தாவை ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர் . மேலும் சமந்தா சில ரசிகர்களுடன் செலஃபீயும் எடுத்துக்கொண்டார்.  

திறப்பு விழா முடிந்து சமந்தா வெளியேறும் வரை அந்த இடத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகை சமந்தா ரசிகர்களின் உற்சாக வரவேற்பிற்கு நன்றி
தெரிவித்தார். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரி நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

 

தற்போது நடிகை சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படம் ஆந்திராவில் சக்கை போடு போட்டுகொண்டு இருக்கிறது. மேலும் இந்த படம் தமிழ் ,மலையாளம்,ஹிந்தி ,போஜ்புரி உள்ளிட்ட நான்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் சமந்தா இணைந்து நடித்த நடிகையர் திலகம் படம் தமிழில் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.


நடிகை சமந்தாவால் சென்னையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு


செய்தியாளர் பற்றி

தங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க

rasu editor and writer

ராசுசெய்தியாளர்