பாரம்பரிய இசை வளர்க்கும் சென்னை நகரம் - யுனெஸ்கோ

       பதிவு : Nov 08, 2017 21:25 IST    
பாரம்பரிய இசை வளர்க்கும் சென்னை நகரம் - யுனெஸ்கோ

உலகில் உள்ள பல நாடுகளின் கூட்டமைப்பான யுனெஸ்கோ, அந்நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்பு துறைகளின் வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது, இதனால் அந்நாடுகளுக்கிடையே அமைதியும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். யுனெஸ்கோ தற்போது உலகில் உள்ள அறுபத்தி நான்கு நாடுகளில் உள்ள 44 நகரங்களில் பாரம்பரிய இசை வளர்க்கும் நகரங்களை தேர்வு செய்துள்ளது, அந்நகரங்களில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் தமிழை இயல், இசை, நாடகம் என்று மூன்றாக வகுத்துள்ளனர், அவற்றில் இசை தமிழர்களின் வாழ்வோடு இணைந்தது என்பது மிகையாகாது. அத்தகைய இசையால், தமிழர்களுக்கு உலகளவில் கிடைத்த மற்றும்மோர் அங்கீகாரமாகும். பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றும் நடிகர் கமல் ஹாசன் சென்னைக்கு வாழ்த்து தெரிவித்துட்டுள்ளனர். இந்தியாவில் சென்னையை தவிர ஜெய்ப்பூர், வாரணாசி ஆகிய நகரங்கள் தேர்தெடுக்கத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


பாரம்பரிய இசை வளர்க்கும் சென்னை நகரம் - யுனெஸ்கோ


செய்தியாளர் பற்றி

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க

purusoth

புருசோத்தமன்எழுத்தாளர்