விக்ரமின் ஸ்கெட்ச் திரைவிமர்சனம்

       பதிவு : Jan 12, 2018 15:12 IST    
sketch movie ratings and reviews sketch movie ratings and reviews

இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள படம் 'ஸ்கெட்ச்'. இந்த படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா முதன் முறையாக இணைந்துள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்யும் சேட்டு ஒருவருடம் வேலை பார்க்கிறார். வாகனங்களின் டியூ கட்டாதவர்களின் வாகனங்களை ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறார் விக்ரம். இதற்காக விக்ரமின் நண்பர்கள் உதவி செய்கின்றனர்.

இந்த படத்தில் நடிகை தமன்னா ஐயர் வீட்டு பெண்ணாக நடித்துள்ளார். அவரிடம் காதல் வயப்பட்டு துரத்தி துரத்தி காதல் செய்கிறார் விக்ரம். இந்த படத்தில் ஆர்.கே சுரேஷ் விக்ரமின் எதிரியாக காணப்படுகிறார். விக்ரமின் காதல் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க ஆர்கே சுரேஷிடம் அடிக்கடி முட்டி மோதி கொண்டிருக்கிறார். படத்தின் ஒரு கட்டத்தில் பிரபல தாதா குமாரின் காரையே விக்ரம் ஸ்கெட்ச் போட்டு தூக்கி விடுகிறார். படத்தின் கதை அப்போது முதல் விறுவிறுப்பாக ஆரம்பமாகிறது. இந்த சிக்கல்களுக்கு யார் காரணம் என்பதை கிளைமேக்ஸ் காட்சியில் காண்பித்து யாரும் எதிர்பாராத கிளைமேக்ஸ் காட்சியுடன் படத்தை முடிக்கிறார் இயக்குனர் விஜய் சந்தர்.

 

இந்த படத்தில் ஸ்கெட்ச் போட்டு காரை தூக்குவது, காதல், வசனம் , சென்டிமென்ட் போன்ற அனைத்தும் ரசிகர்களை கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்தில் தமன்னா கதாபத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் தமன்னா. இந்த படத்திற்கு எஸ் தமன் இசை அமைந்துளார். இவர் இயக்குனர் சங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இசையமைப்பாளராக இவருடைய முதல் படம் 'சிந்தனை செய்'. மேலும் இந்த படத்தை மூவிங் பிரேம் நிறுவனம் தயாரித்துள்ளது. இவர்களுடன் சூரி, வேல ராமமூர்த்தி, ரவி கிஷன், விஸ்வாந்த், ஸ்ரீமான், ஆர்கே சுரேஷ், ராதாரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.


விக்ரமின் ஸ்கெட்ச் திரைவிமர்சனம்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்