Advertisement

இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்ட சத்ரு மோஷன் போஸ்டர்

       பதிவு : Jan 29, 2018 14:35 IST    
director gautham menon release chatru movie motion poster director gautham menon release chatru movie motion poster
Advertisement

இயக்குனர் நவீன் நஞ்சுண்டன் இயக்கத்தில் நடிகர் கதிர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'சத்ரு'. இந்த படத்தில் 'மதயானை கூட்டம்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான கதிர், கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ருஷ்டி டாஜ், சுஜா வருநீ, நீலிமா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ஆர்டி இன்பினிட்டி டீல் நிறுவனம் சார்பில் ரகு குமார், ராஜ ரத்னம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்து வருகிறார்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிரசன்னா எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தின் கதையை இயக்குனர் நவீன் நஞ்சுண்டன் எழுதியுள்ளார். தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் நாயகன் கதிர் வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருவராக விளங்குகிறார். இவருடைய நடிப்பில் மதயானை கூட்டம், கிருமி போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' படத்தில் விஜய் சேதுபதிக்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இவருடைய நடிப்பில் தற்போது சத்ரு படமும், அடுத்ததாக இயக்குனர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் 'சிகை' படத்திலும், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பறியேறும் பெருமாள்' படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஆனந்தி இணைந்துள்ளார். தற்போது உருவாகி வரும் 'சத்ரு' படத்தில் கதிர் முதன் முறையாக காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

director gautham menon release chatru movie motion posterdirector gautham menon release chatru movie motion poster

செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்

Advertisement