Advertisement

ஹேய் ஜூட் படத்தின் இசை வெளியீட்டு விழா வீடியோ

       பதிவு : Jan 27, 2018 14:18 IST    
hey jude movie audio launch video hey jude movie audio launch video
Advertisement

இயக்குனர் சியாம பிரசாத் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'ஹேய் ஜூட்'. இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடிக்க நடிகை த்ரிஷா நாயகியாக களமிறங்கியுள்ளார். இவர்களது கூட்டணி முதன் முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளது. முன்னதாக இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்துள்ளது. இந்த விழாவில் நிவின் பாலி, திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த படத்தின் மூலம் நடிகை திரிஷா மலையாள திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் நடிகர் சித்திக், நீனா குரூப், விஜய் மேனன் மற்றும் காமெடி நடிகரான அஜூ வர்கீஸ் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ராகுல் ராஜ், யோஸேப்பச்சன், ஜெயச்சந்திரன், கோபி சுந்தர் ஆகியோர் இசைஅமைத்துள்ளனர். கிறிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை அனில்குமார் தயாரித்துள்ளார். நடிகர் நிவின் பாலி நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் 'ரிச்சி' படம் வெளியானது.

இந்த படம் 'நேரம்' படத்தை அடுத்து இவருடைய நேரடி தமிழ் படமாகும். இதனை தொடர்ந்து இவருடைய நடிப்பில் 'ஹேய் ஜூட்' படம் வெளியாகவுள்ளது. இதன் பிறகு இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கத்தில் வரலாற்று படமான 'காயம்குளம் கொச்சுண்ணி' படத்திலும், இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் 'மூத்தான்' படத்திலும் நடித்து வருகிறார். இதில் 'மூத்தான்' படம், இளம்பெண் ஒருவர் லட்சத்தீவில் தனது மூத்த அண்ணனை தேடி அலையும் பயணமாக உருவாகி வருகிறது.

hey jude movie audio launch videohey jude movie audio launch video

செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்

Advertisement