Advertisement

கயல் சந்திரனின் டாவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்

       பதிவு : Feb 14, 2018 10:48 IST    
daavu movie first look poster release daavu movie first look poster release
Advertisement

கயல் சந்திரன், கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான 'கயல்' படத்தின் மூலம் திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் 'ரூபாய்' படம் வெளியானது. தற்போது இவரது நடிப்பில் கிரகணம், திட்டம் போட்டு திருடுற கூட்டம், பார்ட்டி, டாவு போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

இதில் 'டாவு' படத்தை இயக்குனர் ராம்பாலா இயக்கி வருகிறார். இவர் முன்னதாக சந்தானம் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற 'தில்லுக்கு துட்டு' படத்தை இயக்கியுள்ளார். மேலும் இவர் 'லொள்ளு சபா' நிகழ்ச்சியையும் இயக்கி உள்ளார். இவருடைய இயக்கத்தில் தற்போது 'டாவு' படம் காதல் கலந்த காமெடி படமாக உருவாகி வருகிறது.

 

இந்த படத்தில் சந்திரன், முனீஸ்காந்த், லிவிங்ஸ்டன், ஊர்வசி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் சந்திரனுக்கு ஜோடியாக ரேபா இணைந்துள்ளார். இந்த படத்தை 2MB டூ மூவி பவ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரகுநாதன் தயாரித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசைக்குழுவை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக சமீபத்தில் தயாரிப்பாளர் ரகுநாதன் தெரிவித்தார். இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை காதலர் தினத்தை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

 

daavu movie first look poster release daavu movie first look poster release

கயல் சந்திரனின் டாவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்

Advertisement