நடிகர் கிருஷ்ணாவின் களரி டீசர் வெளியீடு

       பதிவு : Feb 24, 2018 14:26 IST    
Actor Vijay Sethupathi released Actor Krishna Kalari movie teaser Actor Vijay Sethupathi released Actor Krishna Kalari movie teaser

நடிகர் கிருஷ்ணா நடிப்பில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியான படம் 'வீரா'. இந்த படத்தை இயக்குனர் ராஜமாரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கிருஷ்ணா, கருணாகரன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனை நடிகர் கிருஷ்ணா நடிப்பில் தற்போது களரி, கிரகணம் போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

இதில் 'கிரகணம்' படத்தை இயக்குனர் இலன் இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் கிரண் சந்த் இயக்கத்தில் 'களரி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிகை வித்யா பிரதீப் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

 

இந்த படம், சிறு வயதிலிருந்து அனுபவித்த கொடுமைகளால் இளைஞரான பிறகும் சிறு சிறு விஷயங்களுக்கு பயப்படும் மனிதர், எப்படி தனது பயத்தை எதிர்கொள்கிறார், அவர் வாழ்க்கையில் என்ன சம்பவங்கள் நடக்கிறது, எப்படி அவருக்கு இந்த நோய் வந்தது? என்பதை பற்றி சொல்லும்படமாக உருவாகி வருகிறது.

வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வரும் கிருஷ்ணாவிற்கு இந்த படம் 'யாமிருக்க பயமே' படத்திற்கு பிறகு நல்ல பெயர் சொல்லும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை நக்ஷத்திர மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் செனித் கேலோத் தயாரித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு விவி பிரசன்னா இசையமைக்க ஆர்பி குருதேவ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

 


நடிகர் கிருஷ்ணாவின் களரி டீசர் வெளியீடு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்