Advertisement

நடன புயல் பிரபு தேவாவின் லக்ஷ்மி படத்தின் டீசர்

       பதிவு : Feb 22, 2018 18:15 IST    
Actor Prabhu Deva new movie lakshmi movie official teaser released Actor Prabhu Deva new movie lakshmi movie official teaser released
Advertisement

நடிகர் பிரபு தேவா மற்றும் தமன்னா நடிப்பில் 2016 இல் வெளியான படம் 'தேவி'. இந்த படத்தை இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கியிருந்தார். இவர் முன்னதாக கிரீடம், தலைவா, தாண்டவம், தெய்வ திருமகள் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது தேவி படக்குழு மீண்டும் 'லக்ஷ்மி' படத்தில் இணைந்துள்ளது.

தேவி படத்தில் ஹரரில் களமிறங்கிய இயக்குனர் ஏஎல் விஜய் தற்போது நடனத்தை கையில் எடுத்துள்ளார். இந்த படம் முழுக்க நடந்த சார்ந்ததாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபு தேவா நடன பயிற்சியாளராக வலம் வருகிறார். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள டிடியாவுக்கு நடனம் கற்று தருகிறார் பிரபு தேவா.  

 

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதன் பிறகு தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடனத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசை பக்க பலமாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது படக்குழு வெளியிட்ட டீசருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தை பிரமோத் பிலிம்ஸ் மற்றும் ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ப்ரீத் சக்ரவர்த்தி, சுருதி நல்லப்பா மற்றும் ஆர் ரவீந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசைமைத்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஏஎல் விஜய் எழுதி இயக்கி வருகிறார். 

 


நடன புயல் பிரபு தேவாவின் லக்ஷ்மி படத்தின் டீசர்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்

Advertisement