நடிகர் ராம்சரணின் ரங்கஸ்தலம் டீசர் வெளியீடு

       பதிவு : Jan 24, 2018 17:54 IST    
rangasthalam movie official teaser views crosses 1 million rangasthalam movie official teaser views crosses 1 million

 இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு முன்னணி நடிகரான ராம்சரண் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'ரங்கஸ்தலம்'. இந்த படத்தில் நடிகர் ராம்சரணுக்கு ஜோடியாக நடிகை சமந்தா களமிறங்கியுள்ளார். முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு இயக்குனரான சுகுமார், 2016-ஆம் ஆண்டு நடிகர் ஏன்டிஆர் நடிப்பில் வெளியான 'நின்னைக்கு பிரேமதோ' என்ற படத்தை தொடர்ந்து தற்போது 'ரங்கஸ்தலம்' படத்தை இயக்கி வருகிறார்.

இவருடைய இயக்கத்தில் வெளிவந்த ஆர்யா, ஆர்யா 2, 100%  லவ் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் தனது அறிமுக படமான ஆர்யா, ஆர்யா 2 படங்கள் சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதையும், சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான நந்தி விருதையும் வென்றது. மேலும் இவருடைய இயக்கத்தில் 2011-ஆம் ஆண்டு வெளியான '100% லவ்' படம் வெற்றியடைந்து தமிழில் '100% காதல்' என்ற தலைப்பில் ரிமேக் செய்யப்பட்டு நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் தற்போது நடித்து வருகின்றனர். தமிழில் ரிமேக் செய்யப்படும் இந்த படத்திற்கு இயக்குனர் சுகுமார், திரைக்கதை எழுதியுள்ளார்.

 

மேலும் இந்த படத்தை கிரியேட்டிவ் சினிமாஸ் NY NJ சார்பில் இயக்குனர் சுகுமார் தயாரித்து வருகிறார். தற்போது இவருடைய இயக்கத்தில் 'ரங்கஸ்தலம்' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை கோனிடேலா ப்ரொடக்சன் கம்பெனி சார்பில் நவீன் ஏர்னெனி, ரவி சங்கர், மோகன் செருகுரி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், கொளதமி, 'ஈரம்' ஆதி, ஜகபட்டி பாபு ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் ராம் சரண் சிட்டி பாபு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் சவுண்ட் டிராக் அடுத்த மாதம் வெளிவருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


நடிகர் ராம்சரணின் ரங்கஸ்தலம் டீசர் வெளியீடு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்