பேட்மிட்டன் வீரர் ஸ்ரீகாந்திற்கு பத்மஸ்ரீ விருது

       பதிவு : Nov 02, 2017 17:08 IST    
பேட்மிட்டன் வீரர் ஸ்ரீகாந்திற்கு பத்மஸ்ரீ விருது

இந்திய பாட்மின்டன் வீரர் ஸ்ரீகாந்த், 24. இவர், சமீபத்தில் முடிந்த பிரெஞ்ச் ஓபன் தொடரில் பட்டம் வென்றார். இது, இந்த ஆண்டு இவர் கைப்பற்றிய 4வது ‘சூப்பர் சீரிஸ்’ பட்டம். முன்னதாக இவர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் ஓபனில் பட்டம் வென்றிருந்தார். சிங்கப்பூர் ‘சூப்பர் சீரிஸ்’ தொடரில் பைனல் வரை சென்ற இவர், சகவீரர் சாய் பிரனீத்திடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.

இதன்மூலம் ‘சூப்பர் சீரிஸ்’ தொடரில், ஒரே ஆண்டில் 4 பட்டம் வென்ற முதல் இந்தியர் மற்றும் 4வது சர்வதேச வீரரானார் ஸ்ரீகாந்த். ஏற்கனவே சீனாவின் லின் டான், சென் லாங், மலேசியாவின் லீ சோங் வெய் ஆகியோர் ஒரே ஆண்டில் 4 ‘சூப்பர் சீரிஸ்’ பட்டம் வென்றிருந்தனர்.

 

இதனை கவுரவிக்கும் வகையில், ஸ்ரீகாந்திற்கு நாட்டின் உயரிய ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்க, முன்னாள் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளார்.


பேட்மிட்டன் வீரர் ஸ்ரீகாந்திற்கு பத்மஸ்ரீ விருது


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்

செய்தியாளர் அலுவலக முகவரி
1B, Commercial Site, TNHB,
HUDCO Colony, Peelamedu,
Coimbatore, Tamil Nadu
India - 641004.
செய்தியாளர் கைபேசி எண்
9514514874
செய்தியாளர் அலுவலக எண்
+914224398003
செய்தியாளர் மின்னஞ்சல்
raghulmuky054@gmail.com