அனிருத் வெளியிட்ட காளி படத்தின் அரும்பே பாடல்

       பதிவு : Jan 23, 2018 10:05 IST    
anirudh release kaali movie arumbe first single video song anirudh release kaali movie arumbe first single video song

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலினின் மனைவியான இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நடிப்பில் 'காளி' படம் தற்போது உருவாகி வருகிறது. இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர் சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான 'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் அறிமுகமானார்.

மேலும் இவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், திருநங்கைகள் படும் துயரத்தை பற்றி சொல்லும் 'சதையை மீறி' என்ற பாடலை இயக்கியிருந்தார். இந்த பாடல் கடந்த ஆண்டு வெளிவந்து ரசிகர்களின் வெகுவான வரவேற்பினை பெற்றது. 'வணக்கம் சென்னை' படத்தை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி, தற்போது 'காளி' படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தை நடிகர் விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி அவருடைய 'விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்' சார்பில் தயாரித்து வருகிறார்.

 

இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, சில்பா மஞ்சுநாத் ஆகிய நான்கு நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்திற்கு நடிகர் விஜய் ஆண்டனி 'அண்ணாதுரை' படத்தை தொடர்ந்து இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்தின் 'அரும்பே' என தொடங்கும் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோவை நாளை வெளியிடுவதாக அனிருத் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


அனிருத் வெளியிட்ட காளி படத்தின் அரும்பே பாடல்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்