விஷாலின் இரும்புத்திரை படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

       பதிவு : Jan 30, 2018 12:14 IST    
irumbu thirai movie release at march 29th irumbu thirai movie release at march 29th

நடிகர் விஷால் நடிப்பில் புதுமுக இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'இரும்புத்திரை'. இந்த படத்தில் விஷால் கதிரவனாக ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் அர்ஜுன் வைட் டெவில் என்ற கதாபாத்திரத்தில் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். விஷால் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நடிகை சமந்தா மருத்துவர் ரதி தேவி என்ற கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் போஸ்டர், டீசர், இசை போன்றவை வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இந்த படத்தின் வெளியீடு தேதியை நடிகர் விஷால் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளார். அதன்படி இந்த படம் மார்ச் 29-ஆம் தேதி தமிழில் 'இரும்புத்திரை' என்ற தலைப்பிலும், தெலுங்கில் 'அபிமன்யுடு' என்ற தலைப்பிலும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தை விஷாலின் சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 

இந்த படத்திற்கு ராஜா ராணி, கத்தி, நானும் ரவுடிதான், தெறி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள ஜியார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் ரோபோ சங்கர், டெல்லி கணேஷ், வின்சன்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஷால் நடிப்பில் தமிழில் 25 வது படமாக உருவாகியுள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு ஒரே நாளில் விருந்தளிக்க உள்ளது.

irumbu thirai movie release at march 29thirumbu thirai movie release at march 29th

விஷாலின் இரும்புத்திரை படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்