இயக்குனர் ஏஎல் விஜயின் கரு படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

       பதிவு : Jan 23, 2018 16:01 IST    
karu movie postponed from february 9th to 23rd karu movie postponed from february 9th to 23rd

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் நடிகை சாய் பல்லவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'கரு'. இந்த படம் அடுத்த மாதம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாவதாக படக்குழு தெரிவித்தது. ஆனால் தற்போது எதிர்பாராத காரணங்களால் பிப்ரவரி 23-ஆம் தேதிக்கு தள்ளி போகியுள்ளது. இயக்குனர் ஏஎல் விஜய் முன்னதாக 100 கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கியுள்ளார். இதன் மூலம் 2009-ஆம் ஆண்டின் சிறந்த கார்ப்பரேட் விளம்பரம் விருதை வென்றுள்ளார்.

பின்னர் 2007-ஆம் ஆண்டு நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர், பொய் சொல்ல போறோம், மதராசபட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், இது என்ன மாயம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் 'மதராசபட்டினம்', 'தெய்வ திருமகள்' போன்ற படங்கள் சிறந்த இயக்குனருக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இவர் தற்போது த்ரில்லர் படமான 'கரு' படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

 

இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி, நாக சார்யா, வெரோனிகா அரோரா (குழந்தை நட்சத்திரம்), காந்தாரி நிதின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் சார்பில் தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைக்க நீரவ் சா ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தை தெலுங்கில் 'கணம்' என்ற தலைப்பில் வெளியிட உள்ளனர். இந்த படத்தை வெளிநாடுகளில் யுனைடெட் இந்திய எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் யுகேவில் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனமும் வெளியிட உள்ளது.


இயக்குனர் ஏஎல் விஜயின் கரு படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்