Advertisement

ஏப்ரல் 27 இல் வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டாரின் காலா

       பதிவு : Feb 11, 2018 21:06 IST    
kaala movie release worldwide on april 27th kaala movie release worldwide on april 27th
Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘காலா’. இந்த படம் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். 'கபாலி' படத்தை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடத்துள்ள படம் 'காலா'. இந்த படத்தின் படபிடிப்பு கடந்த 2016, மே மாதம் தொடங்கியது. இதே போல் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ உருவாகி வந்தது.

இந்த இரண்டு படங்களில் எந்த படம் முதலில் வெளிவரும் என்பதில் பெரும் குழப்பம் ரசிகர் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில், ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் சூப்பர் ஸ்டாரின் மருமகன் நடிகர் தனுஷ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

'2.0' வின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் நிறைவடையாததால் 'காலா' படம் முன்னதாக தற்போது வெளியாகவுள்ளது. இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது. இந்த படத்திற்கு 'கபாலி' படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

kaala movie released on april 27thkaala movie released on april 27th

ஏப்ரல் 27 இல் வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டாரின் காலா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்

Advertisement