ads

வாட்சப் செயலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய பிழை

ஒரு நாளைக்கு 1.5 பில்லியன் பயனாளர்கள் உபயோகித்து வரும் வாட்சப்பில் புதிய பிழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 1.5 பில்லியன் பயனாளர்கள் உபயோகித்து வரும் வாட்சப்பில் புதிய பிழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாட்சப் செயலியை ஒரு நாளைக்கு மட்டும் 1.5 பில்லியன் மக்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர். டிஹானால் ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 60 மில்லியன் மெசேஜ்கள் பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் வாட்சப்பில் பரப்பப்படும் போலியான தகவல்களால் அப்பாவி பொது மக்களின் உயிரிழப்புகள் நேர்வதாக புகார் வந்த வண்ணம் இருந்தது. இதனால் தற்போது வாட்சப்பில் ஒரு நபர் அனுப்பும் பார்வர்ட் மெசேஜுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒரு மெசேஜை குறிப்பிட்ட தடவைக்கு மேல் அனுப்ப முடியாது. ஆனாலும் கட்டுப்பாடு, பாதுகாப்பில் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வாட்சப்பில் வரும் மெசேஜை ஹேக்கர்கள் பார்ப்பது மட்டுமல்லாமல் அதனை மாற்றவும் முடியும் என தற்போது ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வாளர்கள் கண்டுபிடித்த இந்த பிழையானது, ஒரு நபர் அனுப்பும் மெசேஜை இடைமறித்து அதனை வேறுவிதமாக மாற்றியமைக்கும்படி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தனிநபர் தகவல் மட்டுமல்லாது குரூப்பில் பகிரப்படும் மெசேஜையும் மாற்ற இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போலியான தகவல்கள் பரவ வாய்ப்புள்ளது. வாட்சப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய பிழை குறித்து பாதுகாப்பு தகவல் நிறுவனமான செக் பாய்ண்ட் தனது இணைதளத்தில் தெரிவித்துள்ளது. இந்த பிழை குறித்து வாட்சப் நிறுவனத்திற்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிழைக்கான காரணம் குறித்து வாட்சப் பதில் அளிக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

வாட்சப் செயலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய பிழை