நீரிழிவு நோய் மற்றும் ஊட்ட சத்து குறைபாடு இந்தியா முதலிடம்
ராசு (Author) Published Date : Nov 03, 2017 16:00 ISTHealth News
இந்தியா
உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பான 'அசோசேம்' மற்றும் லண்டனை சேர்ந்த தனியார் அமைப்பு இணைந்து உலகம் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை பற்றி ஆய்வு நடத்திவந்துள்ளது அதன் விபரம்,
கடந்த 2005-2015 வரை, பச்சிளம் குழந்தைகள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில் இறப்பு எண்ணிக்கை குறைந்தாலும், ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது. உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் 50 சதவீதம் இந்தியாவில் உள்ளது. 2015ம் ஆண்டு இறுதியில் இதன் எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்தது.
நகரங்களில் வசிக்கும் குழந்தைகளை விட கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் தான் ஊட்டச்சத்து விஷயத்தில் மிகவும் பின்தங்கி உள்ளனர். உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் பெரியவர்களை பொறுத்த வரை நீரிழிவு எனும் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில் உலகின் தலைநகர் என்று கூறும்வகையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. நாடு முழுவதும் 6.92 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.