கருப்பு பணத்தை மறைக்க வெளிநாட்டில் போலி நிறுவனங்களின் பெயரில் முதலீடு செய்து மறைத்த புண்ணியவான்கள்
விக்னேஷ் (Author) Published Date : Nov 07, 2017 15:44 ISTWorld News
இந்தியா
'பனாமா பேப்பர்ஸ்' மூலம் போலி நிறுவனங்களின் பெயரில் கோடி கணக்கில் முதலீடு செய்து மோசடி செய்தது, கடந்தாண்டு மே மாதம் அமல்படுத்தப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றன. உலக அளவில் மிக பெரிய புயலை பனாமா பேப்பர்ஸ் ஏற்படுத்தியது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தன் பதவியை இழக்க நேரிட்டது. இதை தொடர்ந்து சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் சங்கம் 'பாரடைஸ் பேப்பர்ஸ்' என்ற பெயரில் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 180 நாடுகளை சேர்ந்தவர்கள் தொடர்பாக கிடைத்த பட்டியலில் அதிக பெயர்கள் கொண்ட நாடு அடிப்படையில் இந்தியா 19வது இடத்தில உள்ளது. இதில் பிரபல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என 714 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
பெர்முடாவை சேர்ந்த ஆப்பிள்பே என்ற நிறுவனமும், சிங்கப்பூரை சேர்ந்த ஆசியாசிட்டி என்ற நிறுவனமும் 19 நாடுகளில் போலி நிறுவனங்களின் பெயர்களில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ, அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்பின் அமைச்சரைவையில் உள்ள வர்த்தக அமைச்சர், பிரிட்டன் ராணி எலிசபெத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், சவுகத் அஜீஸ் உட்பட 120 அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மோசடியில் இந்தியர்களான, "ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் மோசடி வழக்கில் தொடர்புடைய ஜிகுஸ்டா ஹெல்த்கேர் என்ற நிறுவனம், இதன் இயக்குனர்களான காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சச்சின் பைலட், முன்னாள் மத்திய நிதியமைச்சர், சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் பெயர் இடம் பெற்றுள்ளது.
பா.ஜ.க வின் ராஜ்யசபா எம்.பியும், எஸ்.ஐ.எஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளருமான ஆர்.கே.சின்ஹா, பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா, தில்நாசின் என்ற அவருடைய பழைய பெயரில் இடம் பெற்றுள்ளார், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பெர்முடாவை சேர்ந்த நிறுவனத்தில் முன்பு செய்திருந்த முதலீடுகள், வர்த்தக நிறுவன புரோக்கர்-நீரா ராடியா, ஜி.எம்.ஆர் குழுமம், இதை தவிர ஜிண்டால் ஸ்டீல்ஸ், அப்பல்லோ டயர்ஸ், ஹேவல்ஸ், ஹிந்துஜா, எம்.ஆர் எம்.ஜி.எப், வீடியோகான், ஹீராநந்தினி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.