விடைபெற்றார் ஆஷிஷ் நெஹ்ரா அவரது இடத்தை நிரப்புவது யார்?
விக்னேஷ் (Author) Published Date : Nov 04, 2017 14:52 ISTஇந்தியா
Sports News
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான மூன்று T20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டிகளின் முதல் ஆட்டத்தில் இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. நியூசிலாந்து 203 ரன்களுடன் ஆட்டமிழந்து தோல்வியுற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற ஆசிஷ் நெஹ்ரா கடைசி போட்டியாக பங்கேற்று பெருமிதத்துடன் விடைபெற்றார்.
இடது பக்க பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். உலக கோப்பையை இந்தியா வென்ற 2011-ஆம் ஆண்டில் பங்கேற்றவர். இவர் மொத்தமாக 17 டெஸ்ட் தொடரில் 44 விக்கெட்டுகளும், 120 ஒருநாள் போட்டிகளில் 157 விக்கட்டுகளும், 26 T20 போட்டிகளில் 34 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
இவர் இந்த முடிவை தற்போது எடுத்ததல்ல கடந்து 5 வருடங்களுக்கு மேல் ஆலோசித்து வந்துள்ளார். சரியான காரணத்திற்காக காத்திருந்த ஆஷிஷ் நெஹ்ரா தற்போது களத்தில் இருக்கும் பும்ரா மற்றும் புவனேஷ்குமார் போன்ற வீரர்களின் சிறப்பான ஆட்டத்தை கண்டு இதுவே சரியான தருணம் என்று முடிவெடுத்து ஓய்வு பெற்றுள்ளார்.
ஆஷிஷ் நெஹ்ராவின் இந்த முடிவு அனுபவம் வாய்ந்த வீரர்களின் எடுத்துக்காட்டாக அமைகிறது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மற்றும் பலதரப்பினரிடம் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது இந்தியா இரண்டாவது T20 போட்டி விளையாடவுள்ளது. இந்த போட்டியில் ஆஷிஷ் நெஹ்ரா இடத்தில புது முகத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.